வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (13/01/2018)

கடைசி தொடர்பு:18:20 (13/01/2018)

யுவராஜ், கம்பீர், ஹர்பஜன்....  ஐ.பி.எல் ஏலத்துக்கு வரும் 1,122 வீரர்கள்!

11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளன. மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். 

YUVRAJ


ஐ.பி.எல் ஏலம் வருகிற 27, 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 1,122 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏலத்திற்கு வரும் வீரர்கள் பட்டியல் 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களை அதிக விலை கொடுத்து அணிகள் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ள ரஹானே, முரளி விஜய், குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல் ஆகியோருக்கும் நல்ல விலை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இந்த முறை அனைத்து அணிகளின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். கிரிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ், கிரிஸ் லைன், இயோன் மோர்கன், மிட்சல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்கள் ஆவார்கள்.

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த டி.பிராவோ, பிராத்வெயிட், எவின் லெவிஸ், ஜாஸன் ஹோல்டர், இலங்கை வீரர்கள் மலிங்கா, மேத்யூஸ், திக்வெல்லா, பெரேரா, ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், ஷேன் வாட்சன், மிட்சல் ஜான்சன் ஆகியோரும் ஐ.பி.எல் அணிகளின்  முக்கியப் பார்வையில் இருப்பவர்கள்.

தென்னாப்பிரிக்க வீரர்கள் ஹசிம் அம்லா, டூ பிளிஸிஸ், குயின்டன் டி காக், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், நியூசிலாந்து வீரர்கள் கனே வில்லியம்ஸன், காலின் முன்ரோ, டாம் லாதம் ஆகியோருக்கும் நல்ல கிராக்கி உள்ளது.

[6:00 PM, 1/13/2018] Britto Sir Vikatan: