ஷிகர் தவான் பலிகடா; புவனேஷ்வர் ஆடும் லெவனில் இடம்பெறாதது ஏன்? - கொதிக்கும் சுனில் கவாஸ்கர் | Sunil Gavaskar Questions India's Team Selection For 2nd Test

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (13/01/2018)

கடைசி தொடர்பு:20:00 (13/01/2018)

ஷிகர் தவான் பலிகடா; புவனேஷ்வர் ஆடும் லெவனில் இடம்பெறாதது ஏன்? - கொதிக்கும் சுனில் கவாஸ்கர்

செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கிய இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளசி பேட்டிங் தேர்வு செய்தார். 


இந்த போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்குப் பதிலாக பார்த்தீவ் படேலும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குப் பதிலாக இஷாந்த் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 

இந்தநிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”முதல் டெஸ்டில் சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்த புவனேஷ்வர் குமாரை ஆடும் லெவனில் சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது. இஷாந்த் ஷர்மாவை அணிக்குள் கொண்டுவர வேண்டுமென்றால், முகமது ஷமி அல்லது பும்ரா ஆகியோரில் ஒருவருக்குப் பதிலாகக் கொண்டு வந்திருக்கலாம். 
அதேபோல், இந்திய அணியில் ஷிகர் தவானே எப்போது பலியாடாக ஆக்கப்படுகிறார். ஒரு இன்னிங்ஸில் அவர் மோசமாக விளையாடினால் போதும், உடனடியாக அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்படுவதை நாம் பார்க்கலாம்’’ என்றார்.