சரிந்து மீண்ட இந்தியா...சமாளித்து நின்ற தென்னாப்பிரிக்கா! 2-வது டெஸ்ட் நிலவரம் | South Africa Scores 269 for 6 wicket loss

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/01/2018)

கடைசி தொடர்பு:22:00 (13/01/2018)

சரிந்து மீண்ட இந்தியா...சமாளித்து நின்ற தென்னாப்பிரிக்கா! 2-வது டெஸ்ட் நிலவரம்

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் தடுமாறிய இந்திய அணி இறுதியில் சில விக்கெட்டுகளை வீழ்த்தியது. முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.

CRICKET

 

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் துவங்கியது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிகர் தவானுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். விக்கெட் கீப்பர் சாஹாவுக்குப் பதிலாக பார்த்தீவ் பட்டேல் இடம்பெற்றார். புவனேஷ்வர் குமாருக்குப் மாற்றா இஷாந்த் ஷர்மா இடம்பிடித்தார்.

டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டு பிளசி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். துவக்க வீரர்களாக களமிறங்கிய டீன் எல்கர், மார்க்ரம் சிறப்பான துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில் எல்கர் (31 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த அம்லாவும் மார்க்ரமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால், தென்னாப்பிரிக்கா வலுவான ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இந்நிலையில், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 94 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார். அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அம்லா 82 ரன்களில் ரன் அவுட்டானார். இறுதிக்கட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு சில விக்கெட்டுகள் சரிந்தன. 

இன்றைய ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன்  டூ பிளசி 24 ரன்களுடனும், கேசவ் மகாராஜ் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் எடுத்தார். மீதி இருவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.


[X] Close

[X] Close