வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (18/01/2018)

கடைசி தொடர்பு:12:30 (18/01/2018)

2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள்... பல பிரிவுகளில் கில்லியடித்த விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்பதுகுறித்து தற்போது அறிவித்துள்ளது.

ODI team

அதன்படி, 

2017-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் - விராட் கோலி

2017-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் - ஸ்டீவ் ஸ்மித்

2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் அணி - டேவிட் வார்னர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, பாபர் அசாம், டிவில்லியர்ஸ், டிகாக், பென் ஸ்டோக்ஸ், ட்ரென்ட் போல்ட், ஹாசன் அலி, ரஷித் கான் மற்றும் பும்ரா ஆகியோர், பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

2017-ம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி - டீன் எல்கர், டேவிட் வார்னர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், செத்தேஷ்வர் புஜாரா, பென் ஸ்டோக்ஸ், டிகாக், அஷ்வின், ஸ்டார்க், ரபடா மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் சிறந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

2017-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் - விராட் கோலி

விராட் கோலி


பல பிரிவுகளில் கலக்கியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, அதுகுறித்து, `ஐசிசி கிரிக்கெட் வீரருக்கான விருதையும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரருக்கான விருதையும் ஒருசேரப் பெறுவது மிக மகிழ்வளிக்கிறது. இதுதான் கிரிக்கெட் உலகில் கொடுக்கப்படும் மிகப் பெரிய அங்கீகாரமாகும். அதை, சென்ற முறை ஆஷ்வின் பெற்றார். இம்முறை நான் பெறுகிறேன். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இரண்டு இந்தியர்கள் இந்த விருதைப் பெறுவது கூடுதல் சிறப்பாகும். நாங்கள், கிரிக்கெட்டுக்காகத் தரும் அனைத்து கடின உழைப்புகளுக்கும் கிடைத்த அங்கீகாரம் இது' என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.