வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (19/01/2018)

கடைசி தொடர்பு:20:08 (19/01/2018)

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்

நியூசிலாந்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆட்டம் ஒன்றில், ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஜூனியர் உலகக்கோப்பை என்றழைக்கப்படும் இந்தத் தொடரின் லீக் ஆட்டம் மவுன்ட் மாங்கனய் என்ற இடத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி, 48.1 ஓவரில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 155 ரன் என்ற வெற்றி இலக்குடன் பின்னர் களமிறங்கிய இந்திய ஜூனியர் அணி, 21.4 ஓவரிலேயே அந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டியது. இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியாவின் ஷப்மான் கில் 90 ரன்களும் ஹார்விக் தேசாய் 56 ரன்களும் சேர்த்தனர். அங்குல் ராய் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி யு 19 உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்திய ஜூனியர் அணி இடம்பெற்றுள்ள பி பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இந்தியா ஏற்கெனவே தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க