ஆஸ்திரேலிய ஓப்பன்: முன்னணி வீரர் ஜோகோவிச் வெளியேற்றம்! | In Australian open tennis Djokovic lost in round of 16

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (22/01/2018)

கடைசி தொடர்பு:21:32 (22/01/2018)

ஆஸ்திரேலிய ஓப்பன்: முன்னணி வீரர் ஜோகோவிச் வெளியேற்றம்!

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் தொடர் ஆண்டின் துவக்கத்தில் நடக்கும் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடராகும். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் நடைபெறும் இந்த தொடர் இந்தாண்டு கடந்த 10 -ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

ஜோகோவிச்

Picture: #AusOpen

இந்த தொடர் தற்பொது முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது காலிறுதிக்கு முந்தயச் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த ஒரு போட்டியில் டென்னீஸ் உலகின் முக்கிய வீரராக ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். 

காலிறுதிக்கு முந்தயச் சுற்றில் அவர் தென் கொரிய வீரர் ஹையோன் ஷங்கை எதிர்கொண்டார். 21 வயதே ஆன இளம் வீரரான ஷங்க், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். விலகிச்சென்ற பந்தை எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. ஏற்கெனவே எல்போ காயத்தில் இருந்து மீண்டு வந்து விளையாடிய ஜோகோவிச்  மேலும் வலியுடன் விளையாடினார். 

இதனை பயன்படுத்துக்கொண்டு ஷங்க், கடும் போட்டி அளித்தார். இறுதியில் ஜோகோவிச்  6-7(4-7),5-7,6-7(3-7) என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறினார். 

இந்த வெற்றிக்குறித்து பேசிய ஷங்க், “வெற்றி பெறுவது குறித்து முதலில் நான் சிந்திக்கவே இல்லை. அவரை எதிர்த்து விளையாடுவதே எனக்கு பெருமை தான்” என்றார். மற்ற முன்னணி வீரர்களான நடால், சிலிச், டிமிட்ரொவ், ஃபெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.