`சீக்கிரமாகப் போவது உதவும்!' - தென்னாப்பிரிக்காவில் சாதிக்கும் முனைப்பில் மித்தாலி ராஜ்

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை இழந்து திணறிவரும் நிலையில், பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. பிப்ரவரி மாதம் இத்தொடர் தொடங்குகிறது. 

மித்தாலி ராஜ்

இந்நிலையில், இந்தத் தொடர்குறித்து இந்திய கேப்டன் மித்தாலி ராஜ், `தென்னாப்பிரிக்காவுக்கு சீக்கிரமே சென்றால், அங்கிருக்கும் சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும். இங்கிலாந்தில், உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முன்பே அங்கு சென்று பயிற்சி எடுத்தோம். அது, அந்தத் தொடரில் சிறப்பாக விளையாட மிகவும் உறுதுணையாக இருந்தது. மற்ற நாடுகளில் நாம் விளையாடும்போது, அங்கு போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே செல்லுதல் பேருதவியாக இருக்கும். குறிப்பாக, ஆசியச் சூழலில் கிடைக்கப் பெறாத எக்ஸ்ட்ரா-பௌன்ஸ் குறித்து நாம் தெரிந்துகொள்ள முடியும். தென்னாப்பிரிக்கா அணி, மிகவும் வலுவானது. அதை உலகக் கோப்பையிலும் நாம் பார்த்தோம். கிட்டத்தட்ட இறுதிப் போட்டிவரை அவர்களால் வர முடிந்தது. எனவே, இந்தத் தொடர் கண்டிப்பாக சவால் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு வீராங்கனையையும் இந்தத் தொடர் சோதிக்கும்' என்று விரிவாகப் பேசியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!