ஐ.பி.எல் 2018: சி.எஸ்.கே-வில் பிராவோ இன், அஷ்வின் அவுட்... கெய்ல் அன்சோல்டு! #LiveUpdates | IPL auction starts today

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (27/01/2018)

கடைசி தொடர்பு:13:31 (27/01/2018)

ஐ.பி.எல் 2018: சி.எஸ்.கே-வில் பிராவோ இன், அஷ்வின் அவுட்... கெய்ல் அன்சோல்டு! #LiveUpdates

10 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்-லின் மெகா ஏலம் இன்று நடக்க உள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

IPL

இன்றும் நாளையும் பெங்களூரூவில் இந்த ஏலம் நடக்கிறது. 1,122 வீரர்களிலிருந்து 578 வீரர்கள் இந்தக் கடைசி இரண்டு நாள் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். இதில், 244 வீரர்கள் முன்னரே விளையாடிவர்கள். இந்தியர்கள் 62 பேர். 332 வீரர்கள் முதன்முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில், 34 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், ஏலத்தில் இருக்கும் வீரர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனியாக எலம் நடைபெறும். முன்னணி வீரர்கள் 16 பேர் `மார்க்கி' லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். 
 

தவான்

முதல் வீரராகத் தவான் ஏலத்துக்கு வந்தார். அவரை பஞ்சாப் அணி, 5.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால், ஆர்.டி.எம் மூலம் ஹைதராபாத் அவரை மீட்டது. 

அஷ்வின்

இதையடுத்து, அஷ்வின் ஏலத்துக்கு விடப்பட்டார். சி.எஸ்.கே ஏலத்தைத் தொடங்கிவைக்க, பல அணிகள் அஷ்வினை எடுக்க மும்முரம் காட்டின. குறிப்பாக, பஞ்சாப் அணி அவரை எடுக்க ஆர்வம் காட்டியது. இதையடுத்து அவரை 7.60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப். 

பொல்லார்டு

பொல்லார்டு ஏலத்துக்கு வர, டெல்லி அணி அவரை 5.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி, ஆர்.டி.எம் மூலம் அவரை மீட்டது. 

gayle

அடுத்ததாகக் கெய்ல் 2 கோடி ரூபாய் பேஸ் விலையில் ஏலத்துக்கு விடப்பட்டார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், அவர் ஏலத்தில் விற்கப்படாமலேயே சென்றார்.

Stokes

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து நாட்டின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏலத்துக்கு வர, பல அணிகளும் அவரை வாங்க ஆர்வம் காட்டின. ஆனால், இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை 12.50 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 

Du Plesis

அடுத்ததாக, 1.60 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலத்துக்கு எடுக்கப்பட்டார் தென்னாப்பிரிக்கா கேப்டன் டூப்ளீசிஸ். ஆனால், சி.எஸ்.கே, ஆர்.டி.எம் கார்டு மூலம் அவரை மீட்டது. இதனால், இந்த முறையும் டூப்ளீசிஸ் சென்னைக்கே விளையாடுவார். 

Rahane

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரஹானே அடுத்ததாக ஏலத்துக்கு விடப்பட்டார். அவரையும் பல அணிகள் எடுக்க மும்முரம் காட்டியது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதுபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஆர்.டி.எம் மூலம் மீட்டது. அவர் ஏலம்போன விலை 4 கோடி ரூபாய்.

mitchell starc

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஏலக்களத்தில் அடுத்ததாக இருந்தார். அவருக்கும் ஆரம்பம் முதலே போட்டி இருந்த நிலையில், கொல்கத்தா அணி 9.40 கோடி ரூபாய் ஏலத்துக்கு அவரை எடுத்தது. 

ஹர்பஜன் சிங்

சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஹர்பஜன் சிங் 2 கோடி ரூபாய் பேஸ் விலைக்கு ஏலம் விடப்பட்டார். ஆனால், கெய்லைப்போல அவரையும் எந்த அணியும் எடுக்க முனைப்பு காட்டவில்லை. ஆனால், சென்னை அணி அவரை அடிப்படை விலைக்கு எடுத்தது. 

 

shakib al hasan

வங்க தேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் 1 கோடி ரூபாய் பேஸ் விலைக்கு ஏலம் விடப்பட்டார். அவரை 2 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி எடுத்தது. 

glenn maxwell

ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 2 கோடி ரூபாய் பேஸ் விலைக்க வந்தார். அவரையும் பல அணிகள் எடுக்க முனைந்தது. தொடர்ந்து அவரது விலை அதிகரித்துக்கொண்டே போனது. ஆனால், அவரை 9 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது. 

கௌதம் காம்பீர்

கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கௌதம் காம்பீர், 2 கோடி ரூபாய் பேஸ் விலைக்கு வந்தார். பின்னர் அவர் 2.80 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் எடுக்கப்பட்டார். 

dwayne bravo

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகள் கலக்கியவருமான பிராவோ ஏலத்துக்கு வந்தார். அவரை பஞ்சாப் 6.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால், அவரை சி.எஸ்.கே, ஆர்.டி.எம் முறை மூலம் மீட்டது. இதோடு, சி.எஸ்.கே-வுக்கு ஆர்.டி.எம் ஆப்ஷன் முடிந்தது.

kane williamson
 

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஏலத்துக்கு வர, அவரை ஹைதராபாத் அணி 3 கோடிக்கு எடுத்தது. 

joe root

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஏலத்துக்கு வர, அவரை யாரும் எடுக்கவே இல்லை.

யுவராஜ் சிங்

அதிரடி மன்னன் யுவராஜ் சிங் அடுத்ததாக ஏலத்துக்கு வர, அவரை 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி எடுத்தது. சென்ற முறை ஹைதராபாத் அணிக்கு அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனர்களில் ஒருவரான கே.எல்.ராகுல், 2 கோடி ரூபாய்க்கு அடிப்படை விலைக்கு வர, பஞ்சாப் அணியும் ஹைதரபாத் அணியும் அவரை எடுக்க போட்டி போட்டனர். ஆனால், பஞ்சாப் அவரை 11 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 

முரளி விஜய்

கெய்ல், ஜோ ரூட் ஆகியோருக்கு நிகழ்ந்ததுபோல, முரளி விஜயையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. 

டேவிட் மில்லர்

அதிரடிக்கு பெயர் போன, தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆக்‌ஷனுக்கு வர, அவரை 3 கோடி ரூபாய்க்கு ரீட்டெய்ன் செய்தது பஞ்சாப். 
 

aaron finch

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஓபனர்களில் ஒருவரான ஆரோன் பின்ச் ஏலத்துக்கு வந்தார். இன்-ஃபார்ம் பேட்ஸ்மேனான இவரை எடுக்க பல அணிகளும் முனைப்பு காட்டியது. அவரையும் பஞ்சாப் அணி 6.20 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 

brendon mccullum

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், உலகில் நடக்கும் பல்வேறு டி20 தொடர்களில் கலக்கி வருபவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம். இவரை பெங்களூரூ அணி, 3.60 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 
 

chris lynn

ஆஸ்திரேலிய பிக் பேஷ் தொடரில் சிக்ஸர்களுக்கு பெயர் போன வீரர் கிறிஸ் லின். இவர் கண்டிப்பாக அதிக விலைக்கு எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரை எடுக்க பலத்த போட்டி நடந்த நிலையில், கொல்கத்தா அணி, ரூ.9.60 கோடிக்கு எடுத்தது. 

hashim amla

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவனாக இருக்கும் தென்னாப்பிரிக்காவின் அஷீம் அம்லா, ஏலத்துக்கு வந்தார். ஆனால், அவரை யாரும் வாங்கவில்லை. 
 

manish pandey

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மணிஷ் பாண்டே, ஏலத்துக்கு வர, பல அணிகள் அவரை எடுக்க முயன்றன. ஆனால், ஹைதராபாத் அவரை 11 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 

 

ஐ.பி.எல் ஏலம்... கிரிக்கெட் வீரர்களின் ட்விட்டர் ரியாக்‌ஷன்!

ஐ.பி.எல் ஏலம் நடந்து வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பல கோடிக்கு எடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், தாங்கள் ஏலம் எடுக்கப்பட்ட பிறகு ட்விட்டரில் அவர்கள் ரியாக்ட் செய்துள்ளார்கள். 

டெல்லி அணிக்கு எடுக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர், `நான் திரும்ப வந்துட்டேன்' என்று ட்வீட்டியுள்ளார். 

ஹைதராபாத் அணிக்கு திரும்பியுள்ளார் தவான். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ட்வீட்டான, `வரவேற்கிறோம் தவான். காத்திருக்க முடியவில்லை' என்று பதிவிட்டுள்ளனர். அதை தனது பக்கத்தில் ரீ-ட்வீட் செய்துள்ளார் தவான். 

பஞ்சாப் அணிக்கு சென்றுள்ள அஷ்வின், `ஏலம் ஒரு கேசினோ போலத்தான். பஞ்சாப் அணி எனது புதிய வீடாக மாறியுள்ளது. பல மறக்க முடியாத நினைவுகளைத் தந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி' என்று ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

கொல்கத்தா அணி எடுத்திருக்கும் மிட்சல் ஸ்டார்க் வீடியோ மூலம் அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார். `என்னை இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் எடுத்து கே.கே.ஆர் அணிக்கு மிக்க நன்றி. அணியுடன் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

சி.எஸ்.கே அணிக்கு என்ட்ரி கொடுக்கும் ஹர்பஜன் சிங் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் `வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு' என்று ட்வீட்டியுள்ளார். 

 


[X] Close

[X] Close