ஐ.பி.எல் 2018 ஏலத்தின் 2-வது நாள்... ஷாக் கொடுக்கும் அன்சோல்டு பட்டியல்!

10 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்-லின் மெகா ஏலம் நேற்றுத் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. `மார்க்கி' கிரிக்கெட் வீரர்கள், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் நேற்று ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில், இன்று மீதமுள்ள வீரர்களின் ஏலம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 

ஏலம் நடத்துபவர்

நேற்று போல இன்றும் பல முக்கிய வீரர்கள் யாராலும் ஏலம் எடுக்கப்படாமலேயே போனார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்... இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் இயன் மார்கன், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த சிம்மன்ஸ், ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ், நாதன் லயன் மற்றும் மோய்ஸஸ் ஹென்றிக்கேஸ், நியூசிலாந்து நாட்டைச் ரேர்ந்த கோரி ஆண்டர்சன், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஓஜா உள்ளிட்டோரை யாரும் ஏலத்துக்கு எடுக்கவில்லை.

இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரான உனாட்கட்டை தங்கள் அணியில் எடுக்க பலர் போட்டா போட்டி போட்டனர். ஆனால், அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11.50 கோடி ரூபாய்க்கு எடுத்தது. 

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட்டை டெல்லி அணி 2.20 கோடி ரூபாய்க்கு எடுத்தது. 

ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியனை டெல்லி அணி 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

சி.எஸ்.கே அணியில் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தரை பெங்களூரு அணி 3.20 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது.

மனோஜ் திவாரியை பஞ்சாப் அணி, 1 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!