’’வயது வெறும் எண்ணிக்கையே!’’ - ஆஸ்திரேலிய ஓபனில் அசத்திய ரோஜர் பெடரர் | Roger federer captures his 20th Grand Slam title defeating Marin Cilic in Australian Open

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (28/01/2018)

கடைசி தொடர்பு:20:30 (28/01/2018)

’’வயது வெறும் எண்ணிக்கையே!’’ - ஆஸ்திரேலிய ஓபனில் அசத்திய ரோஜர் பெடரர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றார். 

Photo Credit: Twitter/AustralianOpen


மெல்போர்ன் நகரில் நடந்து வந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் குரோஷிய வீரர் மரின் சிலிச்சை, ரோஜர் பெடரர் எதிர்க்கொண்டார். ஐந்து செட்டுகள் வரை நீடித்த இந்த போட்டியில் 6-2 6-7(5) 6-3 3-6 6-1 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரர் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த போட்டி ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் நடந்தது. சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ரோஜர் பெடரர் வெல்லும் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 6-வது சாம்பியன் பட்டத்தை ரோஜர் பெடரர் வென்றுள்ளார். இந்த நூற்றாண்டில் நடந்துள்ள டென்னிஸ் தொடர்களில் 27 சதவீத போட்டிகளில் பெடரர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். மேலும், கடந்த 1968-ம் ஆண்டு முதல் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 10 சதவீத சாம்பியன் பட்டம் பெடரர் வசமே உள்ளது. அதேபோல், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் ஆண் என்ற பெருமையையும் பெடரர் இதன்மூலம் பெற்றார்.  
 


[X] Close

[X] Close