ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்காவின் முதலிடத்தை இந்தியா தட்டிப்பறிக்க வாய்ப்பு உண்டு!

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் 1-2 என்று தோல்வியைத் தழுவினாலும், கடைசி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்நிய மண்ணிலும் நம் வீரர்களால் சோபிக்க முடியும் என்று உலகுக்கு எடுத்துக் காட்டியது. டெஸ்ட் தொடரை அடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா

தற்போதைய ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்படி, தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. ஒருவேளை, இந்திய அணி, இந்தத் தொடரை 4-2 என்ற கணக்கிலோ, இல்லை அதை விடச் சிறந்த முறையிலோ வென்றால், தென் ஆப்பிரிக்காவைக் கீழே தள்ளிவிட்டு, முதலிடத்தை அடைய முடியும். மற்றொரு புறம், முதலிடத்தைத் தக்கவைக்க வேண்டுமென்றால், தென் ஆப்பிரிக்கா அணி இந்தத் தொடரை 3-3 என்று சமன் செய்தாலோ, 4-2 என்று வென்றாலோ போதுமானது.

ஒருநாள் போட்டி தரவரிசை

Picture Courtesy: icc-cricket.com

மற்றொரு பிரச்னை என்னவென்றால், ஒருவேளை இந்தியா இந்தத் தொடரில் 1-5 என்றோ, இல்லை அதைவிட மோசமாக 0-6 என்று வைட்வாஷ் செய்யப்பட்டாலோ, தற்போது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை விடக் கீழே போக வாய்ப்புண்டு. முதல் ஒருநாள் போட்டி, வரும் பிப்ரவரி 1ம் தேதி (வியாழன்), டர்பன் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!