வெற்றியுடன் தொடங்குமா இந்தியா... முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்! | SA won the toss and elected to batting in First ODI against India

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (01/02/2018)

கடைசி தொடர்பு:16:59 (01/02/2018)

வெற்றியுடன் தொடங்குமா இந்தியா... முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்!

இந்திய அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

Photo: Twitter/BCCI

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. அண்மையில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியது. டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி டுபிளசி பேட்டிங் தேர்வு செய்தார்.  

காயம் காரணமாகத் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ் முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்கவில்லை. இது தென்னாப்பிரிக்க அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேநேரம், டெஸ்ட் தொடரை வெற்றியுடன் முடித்ததால், நம்பிக்கையுடன் இந்திய அணி ஒரு நாள் தொடரில் களமிறங்குகிறது. இந்தப் போட்டியில், குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணி (ஆடும் லெவன்):
ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அஜிங்கியா ராஹானே, எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் யுஷ்வேந்திர சஹால்.