வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (03/02/2018)

கடைசி தொடர்பு:14:35 (03/02/2018)

'வாழ்த்து மழையில் ஜூனியர் இந்திய அணி' - பி.சி.சி.ஐ. பரிசுகள் அறிவிப்பு!

ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 4-வது முறையாகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, வாழ்த்துகள் குவிந்துள்ளன. ஜூனியர் உலகக்கோப்பைத் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இன்று நடந்த இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி நான்காவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்றது. இதன்மூலம், கடந்த ஜூனியர் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸிடம் தோற்ற சோகத்தை இந்திய அணி தற்போது ஈடுகட்டியுள்ளது.

Photo Credit: Twitter/BCCI

மேலும், இந்தத் தொடரில் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி உட்பட பல்வேறு சாதனைகளை இளம் இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. இதேபோல, இறுதிப் போட்டியைத் தவிர, அனைத்துப் போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்து இளம் வீரர் சுப்மன் கில் அதிரடி ஸ்டாராக ஜொலித்தார். இந்த நிலையில், நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுகளை அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய ஜூனியர் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சமும், இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்குத் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க