இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து டு பிளசி விலகல்! மார்க்ரம் புதிய கேப்டன் | Du Plessiss out of india Series

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (03/02/2018)

இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து டு பிளசி விலகல்! மார்க்ரம் புதிய கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசி விலகியிருக்கிறார். 

DU


இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டி நாளை நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டு பிளசி சதமடித்தார். போட்டியின்போது டு பிளசிக்குக் கைவிரலில் காயம் ஏற்பட்டது. போட்டி முடிந்து பேசிய டு பிளசி, “காயம் பயப்படும்படி இல்லை, அடுத்த போட்டிக்குள் சரியாகி விடும்” என்று நம்பிக்கையாக தெரிவித்திருந்தார். 

ஆனால், பரிசோதித்துப் பார்த்ததில் காயம் பெரிதாக இருப்பது தெரியவந்தது. அது குணமடைய 3 முதல் 6 வார காலம் ஆகும். ஆகவே, இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 5 ஒருநாள் போட்டி மற்றும் டி-20 தொடரிலிருந்து டு பிளசி விலகியுள்ளார். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பு 23 வயதே ஆன மார்க்ரமிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 

ஏற்கெனவே, முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் விலகியிருந்தார். இந்நிலையில், டு பிளசியும் விலகியிருப்பது தென்னாப்பிரிக்க அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.