`மற்றவர்களைவிட நாம் தனித்து நின்றோம்!' - U19 உலகக் கோப்பை வெற்றி குறித்து சச்சின் பெருமிதம்

ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாகக் கோப்பையை வென்றது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரில், டிராவிட்டின்  பயிற்சியின் கீழ், இறுதிப் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றிருந்தது. தவறுகளைச் சரிசெய்து,  இந்த முறை டிராவிட்டின் இளம் படை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

சச்சின்

இது குறித்து சச்சின், `மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது அண்டர் 19 டீம். நல்ல குழுவாக செயல்பட்டால்தான் பெரிய கனவுகளை அடைய முடியும். நமது வீரர்கள் அவர்களை, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயார்படுத்தியுள்ளனர். சிறப்பாக திட்டமிட்டு அதை செயல்படுத்தியும் உள்ளனர். இந்த வெற்றி, இந்திய அணி மற்றவர்களைவிட தனித்து நின்றது என்பதைத்தான் காட்டுகிறது. பயிற்சிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்தியதற்கு பிசிசிஐ அமைப்பை பாராட்டியே ஆகவேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் கிரிக்கெட் விளையடும் முறை மாறியுள்ளது. இந்திய அணியின் பீல்டிங் நல்ல முன்னேற்றம் அடைந்ததற்குக் கூட காரணம், நல்ல உள்கட்டமைப்பு வசதி இருந்ததனால்தான்' என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!