'சேப்பாக்கம் வரவேற்பை மிஸ் பண்ணப்போறேன்' -அஸ்வின் வேதனை

இரண்டு ஆண்டு தடைகளுக்குப் பிறகு, ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கவுள்ளதை அடுத்து சென்னை ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். 

தோனி, ரெய்னா, ஜடேஜாவை RTM கார்டு சென்னை அணி தக்கவைக்க ஏலத்தின் மூலம் அஸ்வினை பஞ்சாப் வாங்கியது. அஸ்வின் இல்லாதது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சென்னை அணிக்காகக் களமிறங்காதது வருத்தம் அளிக்கிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார். அதில், "கடந்த 10 வருடங்களாக சென்னை அணிக்கு விளையாடிய நிலையில் தற்போது விளையாட முடியாதது வருத்தமளிக்கிறது. ஏலம் என்பது எதிர்பாராதது.

நான் ஒவ்வொரு முறையும் சென்னையில் பௌலிங் செய்யும்போது கிடைக்கும் வரவேற்பை மிஸ் செய்யப்போகிறேன். இருப்பினும், சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பஞ்சாப் இடையேயான போட்டியில் களமிறங்கப்போவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை அணிக்கெதிராகக் களமிறங்குவதும் என்னை மேலும் ஊக்கப்படுத்தும். இதன்மூலம் சொந்த மண்ணில் எனது திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது." முன்னதாக இந்த ஐ.பி.எல் தொடரில், லெக் ஸ்பின் வீசவுள்ளதாகவும் அதற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!