வெளியிடப்பட்ட நேரம்: 00:44 (08/02/2018)

கடைசி தொடர்பு:00:44 (08/02/2018)

கோலி சதம்; மூன்றாவது போட்டியிலும் இந்தியா அசத்தல் வெற்றி..!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தீர்மானித்தது. முதல் பேட் இந்திய அணி, 50 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 160 ரன்களும், ஷிகர் தவான் 76 ரன்களும் குவித்தனர். அடுத்த களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாறியது. தொடக்கவீரராக களமிறங்கிய ஆம்லா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 40 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டும் எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக டுமினி 51 ரன்களும், எய்டன் மார்க்ரன் 32 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.