'தொடரை வெல்லுமா இந்தியா?' - 100வது போட்டியில் களமிறங்கும் ஷிகர் தவான்! 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி  டெஸ்ட் தொடரை 1- 2 என்ற கணக்கில் இழந்தாலும் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து அசத்தி வருகிறது. 

6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத தென்னாப்பிரிக்கா அணிக்கு டிவில்லியர்ஸின் வருகை சற்று ஆறுதலை தந்துள்ளது. இதனால் அந்த அணி கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே இந்தியத் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு இது 100வது ஒருநாள் போட்டியாகும். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஷிகர் தவான் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார். 32 வயதாகும் தவான் இதுவரை 99 போட்டிகளில் விளையாடியுள்ளார். 12 சதம் மற்றும் 25 அரைசதங்களுடன் 4,200 ரன்கள் குவித்துள்ள தவான், ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 137 ரன்கள் அடித்துள்ளார். இது தவானின் 100வது போட்டி என்பதால் அதிரடி காட்டுவார் என கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!