``ஷிகர் தவான் அசத்தல் அரைசதம்’’ - இந்திய அணி 203 ரன்கள் குவிப்பு!

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. 

Photo: Twitter/ICC

ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுமினி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். அதிரடியாக விளையாடிய ரோஹித், 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 15 ரன்களிலும், கேப்டன் கோலி 26 ரன்களிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான், 27 பந்துகளில் அரைசதமடித்தார். அவர் 39 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி 16 ரன்களில் வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே 29 ரன்களுடனும், பாண்ட்யா 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக டி20 போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முதல் 50 பந்துகளில் 100 ரன்களைக் கடந்த இந்திய அணி, மீதமுள்ள 70 பந்துகளில் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!