வெளியிடப்பட்ட நேரம்: 22:16 (18/02/2018)

கடைசி தொடர்பு:01:01 (19/02/2018)

``புவனேஷ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு!’’ - டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி! 

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

Raina


ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷிகர் தவான், 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இதையடுத்து 204 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு,  தொடக்க வீரர் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் சிறப்பான பங்களிப்பு அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜே.ஜே.ஸ்மட்ஸ் 14 ரன்களுக்கு புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் அவுட்டானார். நடுவரிசை வீரர்கள் டுமினி (3 ரன்), மில்லர் (9 ரன்) சீக்கிரமே வீழ்ந்தனர். பெகார்டியன் ரீஸாவுக்கு ஒத்துழைப்பு அளித்தார். அவர் 39 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ஸ்கோர் 154 ரன்களாக உயர்ந்தபோது ரீஸா 70 ரன்களில் அவுட்டானார்.  அவர் 50 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் இந்த ரன்னை எடுத்தார். அத்தோடு தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கை பறிபோனது. 20 ஓவர் முழுமையாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களே எடுக்க முடிந்தது.

puviஇதன் மூலம் இந்திய அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி டி20 தொடரை வெற்றியுடன்  தொடங்கியுள்ளது.