வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (24/02/2018)

கடைசி தொடர்பு:10:53 (24/02/2018)

`கோலி என்னை நம்புகிறார்!' - சுரேஷ் ரெய்னா ஓப்பன் டாக்

கேப்டன் விராட் கோலி என்மீது நம்பிக்கை வைத்துள்ளார் என அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா

இந்தியா - தென்னாப்பிரிக்க இடையேயான மூன்றாவது டி20 போட்டி கேப்டவுன் மைதானத்தில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றாலும், இரண்டாவது போட்டியில் அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்கா நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்தது. இந்திய அணியில் ஷிகர் தவான் நல்ல ஓப்பனிங் கொடுத்து வருகிறார். இதேபோல் கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களும் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதேபோல் தென்னாப்பிரிக்காவும் சம பலத்தில் இருப்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதனிடையே நீண்ட நாள்களுக்குப் பிறகு அணியில் இடம் பிடித்துள்ள சுரேஷ் ரெய்னா கடந்த இரண்டு போட்டிகளிலும் அதிரடி காட்டி வருகிறார். 

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், "தொடரைக் கைப்பற்ற வேண்டியது முக்கியமாகும். அதுதான் அணியின் எண்ணமாக உள்ளது. இந்தியாவின் ஓப்பனிங் நன்றாக உள்ளது. இதேபோல் மிடில் ஆர்டரில் தோனி மற்றும் மணீஷ் பாண்டே நல்ல பாட்னர்ஷிப்பை கொடுக்கிறார்கள். இந்தியாவின் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. எனது பிட்னஸை களத்தில் நீங்கள் பார்க்கலாம். கேப்டன் விராட் கோலி என்மீது நம்பிக்கை வைத்துள்ளார். கடந்த போட்டிகளில் நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தினோம். முதல் ஆறு ஓவர்களில் நன்றாக விளையாடினால் மிகப்பெரிய ஸ்கோர் எடுக்க முடியும். கடந்த காலங்களைவிட தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் இதன் வெற்றியைக் கொண்டாடி வருகிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க