`வயது வெறும் எண்ணிக்கையே’ - அஃப்ரிடியின் அசத்தல் கேட்ச்சுக்குக் குவியும் பாராட்டுகள்! வீடியோ

துபாயில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியின் ஷாகித் அஃப்ரிடியின் அசத்தல் கேட்ச் நெட்டிசன்களின் கவனம் ஈர்த்துள்ளது. 

Photo: Twitter/thepslt20

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதிய போட்டி துபாயில் நேற்று (23.2.2018) நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கராச்சி கிங்ஸ் அணி 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Photo: Twitter/Karachikings

குவெட்டா அணி பேட்டிங்கின்போது, 13 ஓவரை கராச்சி அணியின் முகம்மது இர்ஃபான் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை குவெட்டா அணி வீரர் உமர் அமீன், லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாசினார். எல்லைக்கோட்டுக்கு வெளியில் சென்ற அந்த பந்தை, கராச்சி வீரர் ஷாகித் அஃப்ரிடி அபாரமாகக் கேட்ச் பிடித்தார். எல்லைக்கோட்டுக்கு வெளியில் சென்ற பந்தைப் பிடித்த அஃப்ரிடி, கோட்டைத் தாண்டுவதற்கு முன்பாக மேலே தூக்கியெறிந்த பின்னர் எல்லைக்கோட்டுக்குள் வந்து அவர் பந்தைப் பிடித்தார். அஃப்ரிடியின் இந்த அசத்தல் கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!