`விராட் கோலி இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி!‘ - 3-வது டி20 போட்டியில் பேட்டிங் #IndvsSA

இந்திய அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

Photo Credit: Twitter/BCCI

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருக்கிறது. இந்தநிலையில், தொடரை வெல்லும் அணியை முடிவு செய்யும் முக்கியமான 3-வது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில், உனத்கட்டுக்குப் பதிலாக பும்ராவும், சஹாலுக்குப் பதிலாக அக்‌ஷர் படேலும் சேர்க்கப்ப்ட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரரான ஜே.ஜே. ஸ்மட்ஸுக்குப் பதிலாக கிறிஸ்டியன் ஜோங்கரும், பேட்டர்சனுக்குப் பதிலாக அறிமுகவீரராக ஆரோன் பேங்கிஸோவும் களமிறங்குகின்றனர். தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரராக டேவிட் மில்லர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!