ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்!- 162 ரன்களுக்குச் சுருண்ட தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்குச் சுருண்டது.

South Africa

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்றைக்கு முந்தைய நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. மிட்சல் மார்ஷ் 32 ரன்களுடனும், டிம் பெய்ன் 21 ரன்களுடனும் களத்திலிருந்தனர். 

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். பெய்ன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்சல் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். அவருக்கு ஸ்டார்க் ஒத்துழைப்பு வழங்கினார். ஸ்டார்க் 9-வது விக்கெட்டாக 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்சல் மார்ஷ் 96 ரன்களுக்கு வீழ்ந்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார். பிலாண்டர் 3 விக்கெட்டுகளும் ரபடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

South Africa

அடுத்து தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணிக்கு விக்கெட்டுகள் சரிந்தன. டிவில்லியர்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 162 ரன்களுக்குச் சுருண்டது. டிவில்லியர்ஸ் 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் முடிந்ததும் இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!