"சதத்தை நழுவவிட்ட ஷிகர் தவான்"-  இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு!

இலங்கைக்கு எதிரான முதல் டி20-யில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.

ஷிகர் தவான்

இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர், இலங்கையில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தோனி, கோலி ஓய்வால், புதிய அணிபோல இந்தியா களமிறங்கியது. ரிஷப், வாஷிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர், ஷர்துல் தாகூர் ஆகிய இளம் வீரர்கள் அணியில் இடம்பிடித்தனர். இதையடுத்துக் களமிறங்கிய இந்தியாவுக்கு, தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம்போல, ரோஹித் சர்மா முதல் ஒவேரிலேயே அவுட் ஆக, பின்னால் வந்த சுரேஷ் ரெய்னாவும் இரண்டாவது ஒவரில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 

பின்னர் இணைந்த தவான், மனிஷ் பாண்டே இணை, அணியைச் சரிவிலிருந்து மீட்டது. இருப்பினும், பாண்டே 37 ரன்களில் வெளியேற, உச்சகட்ட பார்மில் இருக்கும் தவான் 49 பந்துகளில் 90 ரன்கள் அடித்தார். சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட அவர், குணதிலகா ஓவரில் பெரேராவிடம் கேட் கொடுத்து அவுட் ஆனார். முன்னதாக டி20-யில் இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை  அவர் படைத்தார். முன்னதாக, கோலி 82 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.  அதன்பின், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!