நிடஹாஸ் டிராபி இப்போது நேரலையில் - 'யப் டிவி' வழங்குகிறது (Advertorial)

இந்தியா மற்றும் வங்க தேசம், இலங்கையுடன் கலந்துகொள்ளவுள்ள முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 6-ஆம் தேதி தொடங்குகின்றன. "நிடஹாஸ் கோப்பை" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்  போட்டியை, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை இணையதள தொலைக்காட்சி சேவையை வழங்கும் தெற்காசிய நிறுவனமான யப் டி.வி. - YuppTV பெற்றுள்ளது.

 

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பிரத்தியேகமாக நேரலையில் போட்டிகளைக் கண்டுகளிக்கலாம். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் யப் டி.வி. இலவச நேரலை ஒளிபரப்பை வழங்குகிறது.

 

ரவுண்ட் ராபின் பார்மேட்டில் நடக்கும் இந்தத் தொடரில், ஒரு அணி மற்ற இரு அணிகளுடனும் இருமுறை மோதும். மார்ச் 6 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில், போட்டிகளுக்கு நடுவில் ஒருநாள் இடைவெளி என 7 போட்டிகள் நடைபெறவுளள்ன. அதிக புள்ளிகளைப் பெறும் இரு அணிகள் 18ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பங்குபெறும்.

YuppTv

 

நிடஹாஸ் கோப்பை:

 

இலங்கையின் 70வது சுதந்திர விழாவை முன்னிட்டு நிடஹாஸ் கோப்பையை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. 1998 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தக் கோப்பை, 20 வருடங்கள் கழித்து மீண்டும் நடத்தப்படுகிறது. இந்திய அணியை ரோஹித் ஷர்மா, இலங்கையை தினேஷ் சந்திமால் மற்றும் வங்க தேசத்தை மஹ்மதுல்லா ஆகியோர் வழிநடத்துகின்றனர்.

 

இலங்கை கொழும்பு நகரிலுள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளை யப் டி.வி.யின் இணையதளம் மற்றும் ஆப் மூலம் பலதரப்பட்ட சாதனங்களில் இருந்து காண முடியும்.

 

யப் டி.வி. பற்றி

 

யப் டி.வி. - இணையதளம் மூலம் தொலைக்காட்சி சேவையை வழங்கும் புகழ்பெற்ற நிறுவனமாகும். இந்தியா, நேபாளம் மற்றும்  இலங்கையின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை 14க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுக்க பார்வையாளர்களுக்கு வழங்கிவருகிறது. டி.வி. நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செய்திகள் மற்றும் பல நிகழ்ச்சிகளையும் நேரலையில் இணையதளம் மற்றும் ஆப் மூலமாக பார்க்க உதவுகிறது இவர்களின் சேவை.

 

உலகம் முழுவதும் வாழும் இந்திய மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள யப் டி.வி. கடந்த பத்து வருடங்களாக நல்ல வேரவேற்பைப் பெற்றுள்ளதோடு, அதிகமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புதல் மற்றும் ஞாயமான கட்டணத்துக்காக பெயர் பெற்றுள்ளது.


மேலும் தகவல்களுக்கு, https://www.yupptv.com/cricket/hero-nidahas-trophy-2018-t20/live-stream​​

Do you like the story?

Please Appreciate the Author by clapping!