`15 எக்ஸ்ட்ராக்கள்; தவறவிட்ட 4 கேட்சுகள்!’ - இந்திய அணிக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்

நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடரின் லீக் சுற்றில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. 

Photo Credit: Twitter/ICC

இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. கொழும்புவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. இதையடுத்து இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் 15 ரன்களிலும், சவுமியா சர்க்கார் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த பின்னர் வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக லிண்டன் தாஸ் 34 ரன்களும், ஷபீர் அகமது 30 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் இந்திய அணி உதிரிகளாக 15 ரன்கள் விட்டுக்கொடுத்ததுடன், 4 கேட்சுகளையும் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!