`பாட்டுப் பாடி அசத்திய சுரேஷ் ரெய்னா!' - மகிழ்ச்சியில் திளைத்த சக வீரர்கள்

இலங்கையில் பாடகராக மாறி சக வீரர்களை சுரேஷ் ரெய்னா மகிழ்வித்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

சுரேஷ் ரெய்னா

photo credit: BCCI

நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. தோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணியாக இந்தியா இத்தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலும், பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது. மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்யவே, தொடர் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. இன்று 2-வது முறையாக இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதற்கிடையே, வீரர்கள் அனைவரும் பயிற்சி நேரம் போக ஓய்வு நேரத்தில், இலங்கையில் ஜாலியாக வலம்வருகின்றனர். 

அதன்படி, நேற்று ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த இசைக்குழு பாலிவுட் பாடல்களை பாடிக்கொண்டிருந்தது. அப்போது அவர்களுடன் சேர்ந்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் பாடத் தொடங்கினார். பாலிவுட் சிங்கர் கிஷோர் குமாரின் கிளாசிக் பாடல் ஒன்றை பாடி சக வீரர்களை மகிழ்வித்தார். 1.55 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை பி.சி.சி.ஐ தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ரெய்னா ஓர் இசைப்பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இதற்கு முன்னர், "மீருதியா கேங்க்ஸ்டர்ஸ்" என்ற பாலிவுட் படத்தில் ரெய்னா ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!