ஐபிஎல் தொடரின் அதிகாரபூர்வ பாடல் வெளியீடு! - வீடியோ #IPL2018 | IPL 2018 official anthem released

வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (12/03/2018)

கடைசி தொடர்பு:20:17 (12/03/2018)

ஐபிஎல் தொடரின் அதிகாரபூர்வ பாடல் வெளியீடு! - வீடியோ #IPL2018

ஐபிஎல் 2018-ன் அதிகாரபூர்வ பாடல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் போட்டிகளுள் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள், வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே  27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. முதல் போட்டியும் இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில்  நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் ஐபிஎல்-க்குத் திரும்பியுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும் மோதுகின்றன. 

ஐபிஎல் தொடரின் 11-வது சீஸன் தொடக்க விழா, மும்பை வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, தொடக்க விழா 6-ம் தேதியே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. பிசிசிஐ-யை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு அதிருப்தி தெரிவித்ததால், தொடக்கவிழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், 2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ பாடல் (ஆன்தம்) இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது, சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. 
 


[X] Close

[X] Close