வெளியிடப்பட்ட நேரம்: 00:03 (13/03/2018)

கடைசி தொடர்பு:00:03 (13/03/2018)

இலங்கைக்கு எதிராக இந்திய அணி அசத்தல் வெற்றி..!

இந்தியா-இலங்கை இடையிலான நான்காவது லீக் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்துவருகிறது. 4-வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஏற்கெனவே, இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்திருந்தது.

மழையின் காரணமாக 19 ஓவராக குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோஹித் சர்மா 11 ரன்களிலும் தவான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராகுல் 18 ரன்களும் சுரேஷ் ரெய்னா 27 ரன்களும் குவித்தனர்.

அவர்கள், இருவரும் ஆட்டமிழக்க மனிஷ் பாண்டேவும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். பாண்டே 42 ரன்களும் தினேஷ் கார்த்திக் 39 ரன்களும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 17.3 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.