ரோஹித் சர்மா அதிரடி..! பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

பங்களாதேஷ்க்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய அணிகள் போட்டியிடும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இன்று இந்தியா-பங்களாதேஷ்க்கு இடையிலான போட்டி கொழும்பிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்வென்ற பங்களாதேஷ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 89 ரன்களும், சுரேஷ் ரெய்னா 47 ரன்களும் குவித்தனர்.

அடுத்து களமிறிங்கிய பங்களாதேஷின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 27 ரன்கள் குவித்தான். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க முஷ்ஃபிகுர் ரஹிம் அதிரடியாக 72 ரன்கள் குவித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால், 20 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி ஆறு விக்கெட் இழப்பு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!