வெளியிடப்பட்ட நேரம்: 23:48 (16/03/2018)

கடைசி தொடர்பு:23:48 (16/03/2018)

இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பங்களாதேஷ் அணி..!

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் பங்களாதேஷ்அணி  2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

இலங்கை - பங்களாதேஷத்துக்கு இடையிலான டி20 போட்டி இன்று கொழும்பு பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தனுஷ்கா குணதிலகா 4 ரன்களிலும், குஷால் மென்டீஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய குஷால் பெரிரா அதிரடியாக ஆடி 61 ரன்கள் குவித்தார். அதேப்போல திஷாரா பெராரா 58 ரன்கள் குவித்தார். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

பங்களாதேஷில் தொடக்கவீரராக களமிறங்கிய தமிம் இக்பால் 50 ரன்கள் குவித்தார். மஹ்மத்துல்லாவும் அதிரடியாக ஆடி 43 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களும் ரன்களைச் சேர்க்க, பங்களாதேஷ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதனையடுத்து, பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.