வெளியிடப்பட்ட நேரம்: 23:39 (17/03/2018)

கடைசி தொடர்பு:23:39 (17/03/2018)

சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது சென்னை அணி..!

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

ஐ.எஸ்.எல் நான்காவது சீசனின் இறுதிப் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில், சென்னை எஃப்.சி அணியும் பெங்களூரு எஃப்.சி மோதின. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். அடுத்ததாக 20-வது நிமிடத்தில் சென்னை அணியின் மைல்சன் ஆல்வ்ஸ் கோல் அடித்து சமப்படுத்தினார்.

48-வது நிமிடத்தில் மைல்சன் ஆல்வ்ஸ் மீண்டும் ஒரு கோல் அடித்ததால் முதல் பாதியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சென்னை மற்றும் பெங்களூரு அணி தலா ஒரு கோல் அடித்தது. அதனால், சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், முதல் அணியாக இரண்டாவது முறையாக சென்னை எஃப்சி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.