வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (18/03/2018)

கடைசி தொடர்பு:18:54 (18/03/2018)

நிதாஹஸ் கோப்பை பைனல்! - டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த இந்திய அணி

நிதாஹஸ் கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி

Photo Credit: Twitter/BCCI

இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கெனெவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 
கொழும்பு பிரேமதாசா மைதானத்தின் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்குப் பதிலாக, ஜெயதேவ் உனத்கட் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேச  அணி, இலங்கை அணிக்கு எதிரானக் கடைசி லீக் போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறது. இந்த தொடரில் ஏற்கெனெவே நடந்த 2 லீக் போட்டிகளிலும் வங்கதேச அணியை இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.