வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (23/03/2018)

கடைசி தொடர்பு:07:29 (23/03/2018)

'எப்புடி இருக்கீக மக்கா... உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல...' சென்னை வந்ததைக் கொண்டாடும் ஹர்பஜன் ட்வீட்!

'தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா' என சென்னை வந்துள்ள ஹர்பஜன் சிங் தமிழில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

ஹர்பஜன் சிங்

photo credit: Twitter/@ChennaiIPL

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் கம்பேக். அஸ்வின், லேட்டஸ்ட் சூப்பர் ஹீரோ தினேஷ் கார்த்திக் போன்ற புது கேப்டன்கள், அதிரடி வீரர் கெய்ல் அணி மாற்றம் என மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் ஐபிஎல் 11-வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதனால், இந்த சீசன் விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சம் வைக்காத வகையில்  இருக்கப்போகிறது. இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு சில தினங்கள் மட்டுமே இருக்கிறது என்பதால், சி.எஸ்.கே வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அதன்படி, முதன்முதலாக சி.எஸ்.கே-வுக்காக ஆடவுள்ள ஹர்பஜன் சிங் சென்னை வந்துள்ளதைக் கொண்டாடும் வகையில், தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் வந்துட்டேன்னு சொல்லு' என ரஜினிகாந்தின் 'கபாலி' பட வசனத்தைப் பதிவிட்டுள்ளார். 

அவரின் இந்த தமிழ் ட்வீட், தற்போது வைரலாகிவருகிறது. கடந்த 10 சீசனிலும் மும்பைக்காக ஆடிய ஹர்பஜன், முதல்முறையாக வேறு அணிக்கு விளையாடுகிறார். சி.எஸ்.கே-வுக்காக ஏலம் எடுக்கப்பட்டது முதல் அவ்வப்போது, ஹர்பஜன் தமிழில் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுவருகிறார். மகளிர் தின வாழ்த்து, தான் பாடிய பகத் சிங் பாடல் என தமிழில் அவர் பதிவிட்ட ட்விட்டுகளை சி.எஸ்.கே ரசிகர்கள் வைரலாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க