நாதஸ்வரம் ஊதும் தோனி; பாங்ரா ஆடும் ஹர்பஜன்! - சென்னை அணியின் அசத்தல் என்ட்ரி

சென்னை வந்துள்ள தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் தற்போது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 

ஐ.பி.எல் தொடரின் 11-வது சீசன் ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தமிழக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் இந்தமுறை களமிறங்குகிறது. போட்டி தொடங்கும் முதல் நாளே, நடப்புச் சாம்பியன் மும்பை அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டோஷூட்களில் நடித்து வருகின்றனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விளம்பரத்தில் நடித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிராவோ, ஹர்பஜன், ஜடேஜா, விஜய் உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ஆட்டோவிலிருந்து இறங்கி நடனமாடுகின்றனர். ஹர்பஜன் பாங்ரா ஆடியவாரே ஆட்டோவில் இருந்து இறங்குகிறார்.  

 

 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்கெனவே பெரிதும் எதிர்பார்ப்புகள் நிலவும் நிலையில், அதனை அதிகப்படுத்தும் வகையில் தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை அணி வீரர்களின் புகைப்படங்கள் சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!