உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி..!

அயர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது. 

உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகள் ஜிம்பாவேயில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பு 209 ரன்கள் எடுத்தது.

Photo Credit: Twitter/cricketworldcup

அந்த அணி சார்பில் பவுல் ஸ்டிர்லிங் 55 ரன்களும் கெவின் ஓ பிரெயின் 41 ரன்களும் எடுத்தனர். ஆஃப்கானிஸ்தான் சார்பில் சிமி சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துவெற்றிபெற்றது. அந்த அணி சார்பில் முகமது ஷாசத் 54 ரன்களும் குலாபதின் நயிப் 45 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியின் வெற்றி மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. ஏற்கெனவே வெஸ்ட் இண்டி அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!