ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ரஹானே? | Rahane may be the captain of rajasthan royals in ipl

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (26/03/2018)

கடைசி தொடர்பு:10:42 (26/03/2018)

ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ரஹானே?

இந்தியாவில் இப்போதே ஐ.பி.எல் சீஸன் தொடங்கிவிட்டது எனலாம். இரண்டு ஆண்டு தடைக்குப் பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் இந்த முறை களமிறங்கவுள்ளன. 

ரஹானே

இதில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார். ஆனால், அவர் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில், அவருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவர் தனது கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதனால், ஐ.பி.எல் தொடரில் ஸ்மித் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகச் செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சர்ச்சை தொடர்பாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ஸ்மித் ராஜினாமா செய்வார் எனவும் பேசப்படுகிறது. அப்படி, ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்து விலகினால், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. 

ராஜஸ்தான் அணி தற்போது இரண்டு ஆண்டு தடையைத் தாண்டி வந்துள்ளது, அதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை எனவும் எனவே, ஸ்மித் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும் அது அணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் உடனடியாக ரஹானே கேப்டனாக அறிவிக்கப்படுவார் எனவும் ராஜஸ்தான் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.