``ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை?" - அதிரடி முடிவெடுக்கும் சி.ஏ | CA decides one year ban to the smith and david warner

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (27/03/2018)

கடைசி தொடர்பு:16:40 (27/03/2018)

``ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை?" - அதிரடி முடிவெடுக்கும் சி.ஏ

தென்னாப்பிரிக்காவுடனான போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவிக்கு நிரந்தரத் தடைவிதிக்கவும் ஸ்மித்துக்கும் வார்னருக்கும் ஓராண்டுக்கு போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கவும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியிலிருந்து டேரன் லேமன் விலகவும் வாய்ப்புள்ளது என்று செய்திகள் வருகின்றன.

ஸ்மித்

Photo Credit: Twitter/ICC

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது பந்தின் தன்மையை மாற்றுவதற்காக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்ட் மஞ்சள் நிறத்திலான அட்டையை வைத்து பந்தை சேதப்படுத்தினார். கேப்டன் ஸ்மித் ஒப்புதல்படியே, அவர் இந்தச் செயலில் ஈடுபடவே, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பந்தைச் சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்ட ஸ்மித், பான்கிராஃப்ட் மற்றும் வார்னர் உள்ளிட்டோரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் வறுத்தெடுத்து வருகின்றன. இந்தச் செயலுக்குப் பொறுப்பேற்கும் வகையில், ஏற்கெனவே, கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகிய நிலையில், இருவருக்கும் ஓராண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய ஊடகங்கள், "ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவிக்கு நிரந்தரத் தடைவிதிக்கவும் ஸ்மித்துக்கும் வார்னருக்கும் ஓராண்டுக்கு போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியிலிருந்து டேரன் லேமன் விலகவும் வாய்ப்புள்ளது என்று செய்திகள் வருகின்றன. விரைவாக சி.ஏ உறுப்பினர் ஜேம்ஸ் சதர்லேண்ட், கிரிக்கெட் சங்கத் தலைவர் லைன் ராயைச் சந்தித்து விளக்கம் அளிப்பார் எனவும் தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க