வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (28/03/2018)

கடைசி தொடர்பு:16:28 (28/03/2018)

`ஸ்மித், வார்னருக்கு அடுத்த இடி' - 12 மாதம் விளையாடத் தடைவிதித்தது ஆஸி. கிரிக்கெட் வாரியம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போடியின்போது, பான்கிராஃப்ட் பந்தைப் சேதப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனிடையே, ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய வீரர் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலதரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்தது.

ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர்தான், இந்தச் செயலுக்கு மூளையாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியன் பிரீமியர் லீக்கின் ஹைதராபாத் அணி கேப்டன் பதவியில் இருந்தும் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டார். 

இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் கிரிக்கெட் விளையாட ஓராண்டும் பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்களும் கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.