ஓபன் பஸ்ஸில் சென்னை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சி.எஸ்.கே. வீரர்கள்! - வைரல் வீடியோ

ஐ.பி.எல் 11-வது சீசன் தொடங்க இன்னும் 9 நாள்களே உள்ளன. அதைவிட, சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் ஜெர்ஸியை 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் களத்தில் பார்க்க இன்னும் 9 நாள்களே உள்ளன என்று சி.எஸ்.கேவின் எல்லோ ஆர்மியினர் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.  

photo credit: twitter/ @ChennaiIPL

இரண்டு ஆண்டுகள் சென்னை அணி விளையாடாததால் வருத்தத்தில் இருந்த ரசிகர்கள், தற்போது மீண்டும் விளையாடவுள்ளதை அடுத்து சென்னை அணியை வரவேற்க தயாராகி வருகின்றனர். இதற்கிடையே, போட்டி தொடங்குவதற்கு சில தினங்கள் மட்டுமே இருக்கிறது என்பதால், சி.எஸ்.கே வீரர்கள் சென்னை வந்துள்ளனர். தினமும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர்கள், ஓய்வு நேரத்தில் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இரண்டு ஆண்டுக்குப் பிறகு ஆடவுள்ளதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பல்வேறு புரொமோஷன் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் சி.எஸ்.கே. வீரர்கள் தோன்றி ஆச்சர்யப்படுத்துகின்றனர். 

இந்நிலையில், சென்னை நகர் முழுவதும் தோனி உள்ளிட்ட வீரர்கள் திறந்த வெளி பேருந்து ஒன்றில் விசிட் அடித்துள்ளனர். `இது நம்ம பிரைடு’ (ithu namma pride) என்ற எழுதப்பட்ட ஓபன் பஸ்ஸில் தோனி, ரெய்னா, ஹர்பஜன் உட்பட ஒட்டுமொத்த அணி வீரர்களும் இன்று சென்னை நகர் முழுவதும் வலம் வந்தனர். அப்போது நகர் முழுவதுமிருந்து ரசிகர்கள் சி.எஸ்.கே. வீரர்களை காண அவர்களைப் பின்தொடர்ந்தனர். இந்தக் காட்சிகளை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது  வைரலாகி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!