'தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!’ - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர் | my apologies for mistakes have been done david warner tweet

வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (29/03/2018)

கடைசி தொடர்பு:14:15 (29/03/2018)

'தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!’ - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர்

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற 'என் தரப்பிலான தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என டேவிட் வார்னர் ட்வீட் செய்துள்ளார். 

டேவிட் வார்னர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரர், பான்கிராப்ட் தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

டேவிட் வார்னர்

இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் நடந்த தவறு குறித்து தனது ரசிகர்களிடம் வார்னர் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில்,  `ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மற்றும் கிரிக்கெட் உலக ரசிகர்களுக்கும். நான் சிட்னி திரும்பிக் கொண்டிருக்கிறேன். என் தரப்பிலான தவற்றுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோதே கிரிக்கெட் விளையாட்டை நேசித்தேன். இந்த தவறினால், கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதன் ரசிகர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நான் புரிந்து கொள்கிறேன். என் குடும்பத்தினருடன் நண்பர்களுடன் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களுடனும் நேரத்தைச் செலவிட இருக்கிறேன். மீண்டும் உங்களைச் சந்திப்பேன்' எனப் பதிவிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.