`தடை செய்யப்பட்ட வார்னருக்குப் பதில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ்!’ - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு | IPL 2018: Hales replaces Warner in Sunrisers Hyderabad

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (31/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (31/03/2018)

`தடை செய்யப்பட்ட வார்னருக்குப் பதில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ்!’ - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வுசெய்துள்ளது.

அலெக்ஸ் ஹேல்ஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பால் டாம்பரிங் ( ball-tampering) விவகாரத்தால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் பரபரத்துக்கொண்டிருக்கிறது. பந்தை சேதப்படுத்திய மூவருக்கும் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனினும், தங்களின் செயலுக்கு வார்னர், ஸ்டீவ், பான் கிராஃப்ட் மூவரும் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டுவிட்டனர். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டிருந்தார். இதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டிருந்தார். டாம்பரிங் விவகாரத்தால் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டனர். 

இதனால், ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும், ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே, வார்னருக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணிக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் தொடக்கவீரரான அலெக்ஸ் ஹேல்ஸ், நடப்பு ஐபிஎல் தொடரின் ஷிகர் தவானுடன் சேர்ந்து, தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவார் எனத் தெரிகிறது. ஹேல்ஸை, ரூ.1 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது. டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி சார்பாக சதம் அடித்த ஒரே வீரர், அலெக்ஸ் ஹேல்ஸ். இதுவரை 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹேல்ஸ், 1,456 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க