விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராம் கொடுத்த `ஸ்பெஷல்’ விருது!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், 2017-ம் ஆண்டின் மோஸ்ட் எங்கேஜ்டு அக்கவுண்ட் (Most Engaged Account) என்ற விருதை இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கியிருக்கிறது.

விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராம் கொடுத்த `ஸ்பெஷல்’ விருது!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், 2017-ம் ஆண்டின் `Most Engaged Account' என்ற விருதை இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கியிருக்கிறது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கோலி, அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விராட் கோலி

இன்ஸ்டாகிராம் சமூக வலைதள விருது இந்தியாவில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் கணக்கு என்ற விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் கணக்கில், லைக்குகள் மற்றும் கமென்டுகள் பிரிவில் கோலி முதலிடத்தைப் பிடித்ததால் அவருக்கு, இந்த விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட விருதுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் விருதுடன் எடுத்த செல்பி புகைப்படத்தைப் பதிவிட்டு, தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் கோலி. அதில், இது சற்றே தாமதம்தான், மோஸ்ட் எங்கேஜ்மென்ட் விருது வழங்கிய இன்ஸ்டாகிராமுக்கு நன்றி. என் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  உங்களால்தான் முடிந்தது. இன்றைய தேதிவரை, நான் சரியான விஷயங்களைச் செய்து சாதித்ததற்கு உங்களின் உந்துதலே காரணம்.  இன்ஸ்டாகிராம் கணக்கில் 2 கோடி ரசிகர்கள் எண்ணைப் பின் தொடர்கின்றனர் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!