`இரவு முழுவதும் காத்திருப்பு' - ஐ.பி.எல் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்..! | IPL Cricket Ticket Sales in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (02/04/2018)

கடைசி தொடர்பு:14:59 (02/04/2018)

`இரவு முழுவதும் காத்திருப்பு' - ஐ.பி.எல் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்..!

`இரவு முழுவதும் காத்திருப்பு' - ஐ.பி.எல் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்..!

வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்பட்டது. இதை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வாங்கிச் சென்றனர்.  

ஐ.பி.எல் டிக்கெட்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சென்னை அணி களமிறங்கவுள்ளதால், வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தினமும் வலைப்பயிற்சி மேற்கொண்டு வந்த அவர்கள் நேற்று இரு அணிகளாகப் பிரிந்து டி20 போட்டி விளையாடினர். இதில், சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இதேபோல், ஷாம்பில்லிங்ஸ், துருவ் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினர்.

இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தாவை சந்திக்கிறது. இதற்கான டிக்கெட் இன்று விற்கப்பட்டது. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய டிக்கெட் விற்பனைக்கு நேற்று இரவிலிருந்தே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிய தொடங்கினர். விக்டோரியா சாலையில் உள்ள 6-ம் நம்பர் கவுன்ட்டரில் இதற்கான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன.

ஐ.பி.எல் டிக்கெட்

குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500. இதேபோல ரூ.2,500, ரூ.4,500, ரூ.5,000 விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனையானது. குறைந்தபட்சமான ரூ.1,300 டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் குவிந்து நின்றனர். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்களுக்கு மேல் வழங்கப்படவில்லை. இதேபோல ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை அணி விளையாடவுள்ளதால் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க