`தீவிரவாத செயல்களை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் கூறுங்கள்!’ - அஃப்ரிடிக்கு ரெய்னா பதிலடி | Suresh Raina reacted strongly to Afridi's Kashmir Tweet

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (04/04/2018)

கடைசி தொடர்பு:18:00 (04/04/2018)

`தீவிரவாத செயல்களை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் கூறுங்கள்!’ - அஃப்ரிடிக்கு ரெய்னா பதிலடி

காஷ்மீர் விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு, கௌதம் காம்பீரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் பதிலடி கொடுத்துள்ளார்.

`தீவிரவாத செயல்களை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் கூறுங்கள்!’ - அஃப்ரிடிக்கு ரெய்னா பதிலடி

காஷ்மீர் விவகாரம்குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு, கௌதம் காம்பீரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் பதிலடிகொடுத்துள்ளார். 

அஃப்ரிடி - ரெய்னா

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் சர்ச்சை, சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே நீடித்துவருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி ட்விட்டரில் கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பதிவில், ``இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில், வருத்தமளிக்கும் வகையிலும் அபாயகரமான வகையிலும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. சுய உறுதி மற்றும் சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்திவருபவர்களின் குரலை ஒடுக்க, அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டுவருகின்றனர். இந்த நிகழ்வுகளைத் தடுக்க, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது’’ என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ஷாகித் அஃப்ரிடியின் கருத்துக்கு இந்தியக் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் பதிலடிகொடுத்திருந்தார். 

இந்த நிலையில், ஷாகித் அஃப்ரிடியின் கருத்துக்கு மற்றொரு இந்தியக் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவும் பதிலடிகொடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா,``காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி. அது, எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருக்கும். எங்கள் மூதாதையர்கள் பிறந்த புண்ணிய பூமி அது. எங்கள் காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் ஆக்கிரமித்து போர் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திடம், அவற்றை நிறுத்துமாறு ஷாகித் அஃப்ரிடி சொல்லுவார் என்று நம்புகிறேன். நாங்கள் விரும்புவது வன்முறையை அல்ல; அமைதியை மட்டுமே’’ என்று கூறியுள்ளார்.