வெள்ளியோடு தொடங்கிய இந்தியாவின் பதக்கப் பட்டியல்! - களைகட்டிய காமன்வெல்த் #CWG 2018

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில், இந்தியா தனது முதல் பதக்கத்தைப் பெற்றுள்ளது.

காமன் வெல்த்
 

21-வது காமன்வெல்த் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளுடன் ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் நேற்று துவங்கியது.

 11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், இந்தியா வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலைத் தொடங்கியுள்ளது.  56 கிலோ பளு தூக்கும் போட்டியில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கே.பி. குருராஜ், வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். 

கர்நாடகாவைச் சேர்ந்த குருராஜின் தந்தை, டிரக் ஓட்டுநர். தற்போது, இந்திய விமானப்படையில் கடைநிலை ஊழியராகப் பணிபுரியும் குருராஜ், சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். அவரின் உடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். கௌஹாத்தியில் நடைபெற்ற 12-வது தெற்காசியப் போட்டிகளில், குருராஜ் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!