ஐ.பி.எல் ட்ரெண்ட்ஸ்... இந்த ஓர் அணியைத் தவிர ஒருவர்கூட இல்லையா? #GoogleTrends | IPL ticket sale google trends

வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (05/04/2018)

கடைசி தொடர்பு:15:34 (05/04/2018)

ஐ.பி.எல் ட்ரெண்ட்ஸ்... இந்த ஓர் அணியைத் தவிர ஒருவர்கூட இல்லையா? #GoogleTrends

திரும்ப வந்துட்டேன்னு சொல்லுனு கபாலி கணக்கா என்ட்ரி கொடுத்திருக்கு சி.எஸ்.கே. ஐபிஎல்-ல மொத்தம் எட்டு டீம் இருக்கு ஆனா இந்த டீம் மட்டும் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்னு கேட்டா பதில் கூகுளே சொல்லும்.

ஐ.பி.எல் ட்ரெண்ட்ஸ்... இந்த ஓர் அணியைத் தவிர ஒருவர்கூட இல்லையா? #GoogleTrends

ரு ப்ளேயர் ரெண்டு வருஷம் ஃபார்மில் இல்லாம இருந்தா அந்த ப்ளேயர எல்லாருமே மறந்துடுவாங்க... ஒரு டீம் ரெண்டு வருஷம் தடை பண்ணா அந்த டீம் பத்தி யாருமே தேடக்கூட மாட்டாங்க... ஆனா நம்ம சி.எஸ்.கே இதுக்கெல்லாம் விதிவிலக்கு... `வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'னு கபாலி கணக்கா என்ட்ரி கொடுத்திருக்கு சி.எஸ்.கே. ஐ.பி.எல்-ல மொத்தம் எட்டு டீம் இருக்கு ஆனா இந்த டீம் மட்டும் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்னு கேட்டா பதில் கூகுளே சொல்லும்.

சினிமால டாப் ஹீரோக்கள் படத்துக்கு முதல் வாரம் டிக்கெட் கிடைக்காது. அதேமாதிரிதான் சிஎஸ்கே. டிக்கெட் விற்பனை தொடங்குன கொஞ்ச நேரத்துலயே 1300 ரூபாய் டிக்கெட் ஆரம்பிச்சு 6500 ரூபாய் டிக்கெட் வரைக்கும் எல்லாமே வித்து தீர்ந்துடுச்சு... இதெல்லாம் பெருமையானு கேட்கலாம்.. எல்லா ஊர்லயும்தான் இது நடக்கும்னு சொல்றவங்களுக்கு கூகுள் ட்ரெண்ட்ஸ் தான் பதில்.

கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஐ.பி.எல்-க்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இதற்காக ஏப்ரல் 1ம் தேதி இரவே சில ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவிந்தனர். காலை 9:30 மணியளவில் தொடங்கிய விற்பனையில், கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிய முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் டிக்கெட்டின் ஆரம்ப விலை 1750 ரூபாய். பெங்களூருக்குப் பின் அதிக ஆரம்ப விலை கொண்ட இரண்டாவது மைதானமாக இருப்பது சென்னைதான். இதற்கு காரணம் இரண்டு அணிகளுக்கும் இந்தியாவை வழிநடத்தும் தோனியும், கோலியும் கேப்டனாக இருப்பதுதான் என்கின்றனர் ரசிகர்கள். இரண்டு வருடம் கழித்து சிஎஸ்கே வீரர்களை யெல்லோ ஜெர்ஸியில் காணப்போகிறோம் என்று ரசிகர்களிடையே உள்ள உற்சாகம் வேற லெவல்.

ஐபிஎல்

'ஐபிஎல் டிக்கெட்ஸ்' குறித்த கூகுள் தேடலில் அதிகம் தேடிய மாநிலம் தமிழகம்தான். காரணம் சென்னை சூப்பர் கிங்ஸின் ரீஎன்ட்ரி. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கர்நாடகமும் மூன்றாம் இடத்தில் புதுச்சேரியும் உள்ளன..

`ஐபிஎல் டிக்கெட்ஸ்' குறித்து ' www.chennaisuperkings.com',``சென்னை சூப்பர் கிங்ஸ்',`ஐபிஎல் டிக்கெட் ஃப்ரைஸ் இன் சென்னை' ஆகியவற்றை அதிகமாகத் தேடியுள்ளனர். இது தொடர்பாக மேலும் `டிக்கெட் அட்மிஷன்',`புக் மை ஷோ' ,`இந்தியன் ப்ரீமியர் லீக்',`ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு',`சீட்டிங் கெப்பாசிட்டி' ஆகியவற்றையும் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

ஐபிஎல் டிக்கெட்ஸ் என்ற தேடலில் டாப் இருபது தேடல்களில் வேறு எந்த அணியின் பெயருமே இடம்பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யம். உலகம் முழுவதும் ஐபிஎல் என்று தேடினாலும் சரி, இந்தியாவில் தேடினாலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி எல்லா இடங்களிலும் யெல்லோ ஜெர்ஸிதான் மாஸ். ஐபிஎல் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பே கூகுள் தேடலில் மாஸ் காட்டும் சிஎஸ்கே. இந்த முறை களமிறங்கினாலே கெத்துக் காட்டும் என்பதில் ஆச்சர்யமில்லை. ஐபிஎல் தொடரில் இணையம் விரும்பும் அணி என்பது எப்போதும் சிஎஸ்கே தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்