ரூ.6138.1 கோடிக்கு ஏலம் போன இந்திய அணியின் ஒளிபரப்பு உரிமம்!

இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை 2023 ம் ஆண்டு வரை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.6,138.1 கோடிக்கு வாங்கியுள்ளது.

ரூ.6138.1 கோடிக்கு ஏலம் போன இந்திய அணியின் ஒளிபரப்பு உரிமம்!

இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை 2023 ம் ஆண்டு வரை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.6,138.1 கோடிக்கு வாங்கியுள்ளது.

பி.சி.சி.ஐ.

Photo: Twitter/BCCI

இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை ஒளிபரப்பும் உரிமைக்கான ஏலம் கடந்த 3 நாள்களாக நடந்து வந்தது. பரபரப்பான இந்த ஏலத்தில் ஸ்டார் இந்தியா, ரிலையன்ஸ் மற்றும் சோனி ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்குகொள்ளத் தகுதியான நிறுவனங்களாக இந்தியக் கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

முதன்முறையாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் இந்திய அணி உள்ளூரில் விளையாடும் போட்டிகள் மற்றும் உள்ளூர் தொடர்கள் என அனைத்துவிதமான கிரிக்கெட் தொடர்களையும் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை 5 ஆண்டுகள் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றியது. இதற்காக அந்த நிறுவனம் ரூ.6138.1 கோடி செலவழித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்திய அணி, 102 போட்டிகளில் விளையாடுகிறது. சராசரியாக ஒவ்வொரு போட்டிக்கும் பி.சி.சி.ஐக்குக் கிடைக்கு வருமானம் ரூ.60 கோடிக்கும் சற்றே அதிகமாகும். 

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பி.சி.சி.ஐயின் கௌரவச் செயலாளர் (பொறுப்பு) அமிதாப் சௌத்ரி அறிவித்தார். கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்திலும் அந்த உரிமையை ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களை ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் சேனல்களில் மட்டுமே காண முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!