`ஐ.பி.எல் ( IPL 2018) போட்டிகளுக்கு அழைத்தாலும் ஆட மாட்டேன்!' - காரணத்தை விளக்கிய அஃப்ரிடி | I Will Not Play In IPL 2018 - Says Shahid Afridi

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (06/04/2018)

கடைசி தொடர்பு:16:32 (06/04/2018)

`ஐபிஎல் போட்டிகளுக்கு அழைத்தாலும் ஆட மாட்டேன்!' - காரணத்தை விளக்கிய அஃப்ரிடி

`ஐபிஎல் போட்டிகளுக்கு அழைத்தாலும் ஆட மாட்டேன்!' - காரணத்தை விளக்கிய அஃப்ரிடி

''ஐபிஎல் போட்டிகளில் விளையாட அழைத்தால்கூட நான் செல்ல மாட்டேன்'' என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஷாகித் அஃப்ரிடி

'

"இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில், அபாயகரமான வகையில் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்திவருபவர்களின் குரலை ஒடுக்க, அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டுவருகின்றனர்" - இது காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்த கருத்துகள். அஃப்ரிடி தெரிவித்த இந்த கருத்துக்கு, காம்பீர், ரெய்னா உள்ளிட்ட இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இருப்பினும், இந்தியாவை மேலும் விமர்சிக்கும் விதமாக, ஐபிஎல் போட்டிகள் தொடர்பாகக் கருத்து கூறியுள்ளார் அஃப்ரிடி. 

இதுகுறித்து பாகிஸ்தான் டி.வி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``ஐபிஎல் போட்டிகளில் விளையாட அழைத்தால்கூட நான் செல்லமாட்டேன். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள், எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டியைப் பின்னுக்குத் தள்ளி பெரிதாக உருவெடுக்கும். பிஎஸ்எல் போட்டிகளில் விளையாடுவதையே நான் விரும்புகிறேன். ஒருபோதும், ஐபிஎல்-லில் விளையாட எனக்கு ஆர்வம் கிடையாது" என்றார். ஐபிஎல் தொடக்க சீசனில், ஹைதராபாத் டெக்கான் அணிக்காக விளையாடிய அஃப்ரிடி, அப்போது, ''மிகச் சிறப்பான கிரிக்கெட் தொடர் ஐபிஎல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதில் விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க